நாசரேத், ஜூலை.30: நம்ம நாசரேத் நல்ல நாசரேத் அமைப்பின் மூலம் கபசுரக் குடிநீர் வழங்குவதை சாத்தான் குளம் டி.எஸ்.பி. நாகராஜ் துவக்கி வைத்தார்.
நாசரேத் இரயில் நிலையம் அருகில் நம்ம நாசரேத் நல்ல நாசரேத் அமைப்பின் மூலம் கபசுரக் குடிநீர் மற் றும் முக்கவசம் ( மாஸ்க்) வழங்குவது நடைபெற்றது.நாசரேத் காவல் நிலைய ஆய்வாளர் சகாயசாந்தி, உதவி ஆய்வாளர்கள் சூரியன், செல் வின், கண்ணையா ஆகியோர் முன் னிலை வகித்தனர்.சாத்தான்குளம் டி.எஸ்.பி. நாகராஜ் தலைமை வகித்து கபசுரக் குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கு வதை துவக்கி வைத்தார்.இதற்கான ஏற்பாடுகளை நம்ம நாசரேத் நல்ல நாசரேத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.