தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை

0
96
congress

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்க காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு பணி நியமனக் ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைவர் பாரகன் அந்தோணிமுத்து தலைமையில் நடைபெற்றது. மண்டல தலைவர்கள் மிக்கேல்குருசு(கிழக்கு), லெட்சுமணன்(மேற்கு), முனியசாமி(வடக்கு), ஞானஜெகன்(தெற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி மாவட்ட முன்னாள் ஓ.பி.சி.பிரிவு காங்கிரஸ் தலைவர் ஜெயக்கொடி பஞ்சாயத்துராஜ் சங்க உறுப்பினர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தொடர்ந்து நடைபெற்ற, கூட்டத்தில், தனியார் கார்ப்பரேட் கம்பெனிகளின் கடனை தள்ளுபடி செய்யும் மத்திய அரசு விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்திடவேண்டும், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தக்கூடாது, வங்கிகளில் விவசாயிகள் கடன் பெறும் முறையை எளிமைப்படுத்தவேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.

இதில், மண்டல காங்கிரஸ் தலைவர்கள் தங்கராஜ், செந்தூர்பாண்டி, முன்னாள் மாநகராட்சி கவுன்சிலர் சாமுவேல்ஞானதுரை, மண்டல துணைத்தலைவர் கன்னிசாமி பாண்டியன், செயல் துணைத்தலைவர் சுரேஷ் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here