நல்லம்மாள்புரத்தில் 3ஆண்டுகளுக்கு பிறகு குடிநீர் விநியோகம் – கிராம மக்கள் மகிழ்ச்சி

0
67
kudineer news

சாத்தான்குளம், ஜூலை 30:சாத்தான்குளம் அருகே நல்லம்மாள்புரத்தில் 3ஆண்டுகளுக்கு பிறகு கூட்டுக்குடிநீர் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூர் ஊராட்சிக்குள்பட்ட இடைச்சிவிளை அடுத்த நல்லம்மாள்புரம் பகுதி மக்களுக்கு கடந்த 3ஆண்டுகளாக கூட்டு குடிநீர் வரவில்லையாம். இதனால் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வந்தனர். இதையடுத்து ஊர் மக்கள், அரசூர் ஊராட்சித்தலைவர் தினேஷ் ராஜசிங்கை சந்தித்து நல்லமாள்புரத்திற்கு கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.

அதன்பேரில் ஊராட்சித் தலைவர், கூட்டுக்குடிநீர் திட்ட குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் பேசி பழுதான குழாய்களை சீரமைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி பழுதான குழாய் சீரமைக்கப்பட்டு நல்லம்மாள்புரம் மக்களுக்கு கூட்டு குடிநீர் திட்ட குடிநீர் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சித் தலைவர் தினேஷ்ராஜசிங், ஊராட்சி மன்ற உறுப்பினர் ராணி, மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் சுந்தரவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here