சாத்தான்குளம் போலீஸார் தாக்கியதாக புகார் செய்த ராஜசிங்கிடம் சிபிசிஜடி அதிகாரிகள் விசாரணை

0
65
sathankulam police

சாத்தான்குளம், ஜூலை 31:

சாத்தான்குளம் போலீஸார் கைது செய்தபோது கடுமையாக தாக்கியதாக பேய்க்குளம் வாலிபர் ராஜசிங் புகார் செய்திருந்தார். அது தொடர்பாக சிபிசிஐடி அதிகாரிகள் இன்று(31.07.2020) சாத்தான்குளத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சாத்தான்குளம் அருகே தெற்கு பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ஜெயக்குமார் (39.. ஊராட்சிமன்ற உறுப்பினரான இவர், கடந்த மே 18ஆம்தேதி இரவு மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் போலீஸார் 18 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். பனைக்குளத்தைச் சேர்ந்த ராஜசிங் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து மே 20 ஆம்தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே பொது முடக்கத்தை மீறி கடையை திறந்து வைத்திருந்ததாக சாத்தான்குளம் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். போலீஸார் தாக்கியதில்தான் அவர்கள் இறந்தனர் என்கிற குற்றசாட்டு கிளம்பியது. அப்போது கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராஜசிங், உடல்நலக்குறைவு காரணமாக கோவில்பட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரும் தன்னை அழைத்து சென்றபோது சாத்தான்குளம் போலீஸார் கொடூரமாக தாக்கியதாக, ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கை விசாரித்த நீதிபதியிடம் புகார் செய்தார். மேலும் மதுரை உயர்நீதிமன்றகிளையிலும் தன்னை தாக்கி கொலை செய்ய முயன்ற உதவி ஆய்வாளர் ரகுகணேஷ் உள்ளிட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இந்த வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று (31.07.2020)சிபிசிஐடி காவல் ஆய்வாளர் சபிதா தலைமையில் 5பேர் சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வந்தனர். அவர்கள் வருகையொட்டி ஏற்கனவே புகார் கூறப்பட்ட ராஜசிங், கொலை வழக்கில் கைதாகி ஜாமினில் வந்ததையடுத்து சாத்தான்குளம் காவல் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டார். அங்கு வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் ராஜசிங்யிடம் விசாரணை செய்தனர். மேலும் ராஜசிங் தாக்கப்பட்டதாக சொல்லப்பட்ட இடங்களை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

பின்னர் பேய்க்குளம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துக்கு சென்றனர். அங்கு மதிய உணவை முடித்தனர். மீண்டும் மாலை 3.30 மணி அளவில் விசாரணையை தொடங்கினர். உடல்நலக்குறைவுக்கான காரணம், சிகிச்சை பெற்றது குறித்தும் கேட்டறிந்தனர். தொடர்ந்து பல கேள்விகள் கேட்டு விசாரணை மேற்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here