வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதி மணல் கொண்டு அடைப்பு – விவசாயிகள் எதிர்ப்பு

0
114
sathankulam

சாத்தான்குளம், ஆக. 2:

வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதி மணல் கொண்டு அடைக்கப்பட்டுள்ளதால் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குனேரி ஒன்றியம் வெங்கட்ராயபுரம் ஊராட்சிக்குள்பட்ட வெங்கட்ராயபுரம் குளம் தமிழக அரசின் தூர்வாறும் திட்டத்தின் கீழ் தூர்வாறி கரைகள் பலப்படுத்தி குளங்கள் ஆழப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. அதன் மறுகால் பகுதிகளுக்கு சீரமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் குளத்தின் மறுகால் உள்ள குளத்தின் உள் பகுதியில் மணல் குவிக்கப்பட்டு குளம் நிரம்பியதும் மறுகால் வழியாக தண்ணீர் வெளியேறாதவாறு அடைத்து வைக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் விஜயநாராயணம் குளம் நிரம்பியதும் வெங்கட்ராயபுரம் வழியாக சாத்தான்குளம் பகுதியான கொம்பன்குளம், நெடுங்குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்களுக்கு கருமேனி ஆற்று வழியாக தண்ணீர் வந்தடையும் நிலை உள்ளது. தற்போது வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதியில் மணல் குவித்து அடைக்கப்பட்டுள்ளதால் அக்குளத்துக்கு பின் சாத்தான்குளம் பகுதி குளங்களுக்கு தண்ணீர் வருவது பாதிக்கப்படும் நிலை உள்ளது. மேலும் அக்குளம் நிரம்பினால் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியிலும் தண்ணீர் பாய வாய்ப்புள்ளது என விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து புகார் தெரிவித்துள்ளனர்.

ஆதலால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு வெங்கட்ராயபுரம் குளத்தின் மறுகால் பகுதியில் குவிக்கப்பட்டுள்ள மணல்கள் அகற்றி, அக்குளத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் அதற்கு அடுத்தாற்போல் உள்ள குளங்களுக்கு பாய்ந்து செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here