கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் பால்குட ஊர்வலம்

0
191
kvp news

கார்த்திகை மாத 2-வது சோமவாரத்தை முன்னிட்டு கோவில்பட்டியில் யோகீஸ்வரர் உறவின்முறை சங்கம் சார்பில் 77-வது ஆண்டு சோமவார திருவிழா இன்று நடந்தது.

இதையொட்டி கோவில்பட்டி பாரதி நகர் யோகீஸ்வரர் திருமண மண்டபத்தில் இருந்து 405 பால்குட ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை யோகீஸ்வரர் உறவின்முறை சங்க தலைவர் ஆனந்த் தொடங்கி வைத்தார். ஊர்வலம் பசுவந்தனை ரோடு, எட்டயபுரம் ரோடு வழியாக 4 ரதவீதிகளை சுற்றி செண்பகவல்லி அம்பாள் கோயிலை அடைந்தது. அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

இரவு காந்தி மைதானத்தில் பட்டிமன்றம் நடந்தது. இதில் உறவின் முறை சங்க செயலாளர் வெயிலுமுத்து, துணை தலைவர் கிருஷ்ணசாமி, பொருளாளர் மாரிக்கண்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here