‛’பிராந்திய ஒருமைப்பாட்டில் சமரசம் கிடையாது’: சீனாவிடம் இந்தியா திட்டவட்டம்

0
269
india - cina

புதுடில்லி,: இந்திய பிராந்திய ஒருமைப்பாட்டில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது’ என, மூத்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான, ஐந்தாவது கட்ட பேச்சில், சீனாவிடம், இந்தியா திட்டவட்டமாக தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா — சீன ராணுவ உயர் அதிகாரிகள் மத்தியிலான, ஐந்தாம் கட்ட சமரச பேச்சு, சீனாவின் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள, மோல்டோ என்ற இடத்தில், நேற்று முன் தினம் நடந்தது. இரு நாட்டு அதிகாரிகளிடையே, 11 மணி நேரம், பேச்சு நீண்டது.அப்போது, கிழக்கு லடாக் பகுதியில், முன்பிருந்த நிலை தொடரவும், பான்காங் ஸோ உள்ளிட்ட, கிழக்கு லடாக்கின் பல பகுதிகளில் இருந்து, சீன ராணுவம், விரைவில் முழுமையாக திரும்ப பெறப்பட வேண்டும் என்பதை, ராணுவ அதிகாரிகள் தெளிவுபடுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், பிராந்திய ஒருமைப்பாட்டில், ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது’ என, சீன ராணுவத்திடம், நமது அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here