தூத்துக்குடி மாவட்டத்தில் 74வது சுதந்திர தின விழா – கலெக்டர் கொடியேற்றி நலத்திட்டங்கள் வழங்கினார்

0
97
thoothukudi collector

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்திய திருநாட்டின் 74 ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து 222 பயனாளிகளுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்தார். தொடர்ந்து வெள்ளை புறாக்களை வண்ண வண்ண பலூன்களையும் பறக்கவிட்டார்.

தொடர்ந்து முககவசம் அணிந்த காவல்துறையினர் அணிவகுப்பை அவர் பார்வையிட்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அரசின் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, அலுவலர்களுக்கும் நற்சான்றிதல்களை வழங்கினார். கொரண தொற்று தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள்,மற்றும் பொது சுகாதாரத் துறையை சார்ந்த அலுவலர்களுக்கும் அவர் நற்சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் வேளாண்மைத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி, ஊராட்சித் துறை, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை ஆகியவற்றின் மூலம் 222 பயனாளிகளுக்கு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார். தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 26 காவல் ஆய்வாளர்களுக்கு நற்சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here