தச்சமொழி ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில் கொடை விழா

0
39
sathankulam

சாத்தான்குளம், ஆக. 14:

தச்சமொழி அருள்மிகு ஸ்ரீசுடலைமாடசுவாமி கோயில் கொடை விழா நடைபெற்றது.

சாத்தான்குளம் தச்சமொழி அருள்மிகு ஸ்ரீசுடலைமாட சுவாமி கோயில் வருடாந்திர கொடை விழா ஆடிமாத இறுதி வாரம் விமர்சையாக 3நாள்கள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு கரோனா தடுப்பு பொது முடக்கம் உள்ளதையொட்டி அரசின் விதிமுறைப்படி கொடை விழா நடைபெற்றது காலை 10மணிக்கு வருஷாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி ஸ்ரீகணபதி உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. இதையடுத்து கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஸ்ரீசுடலைமாடசுவாமி, ஸ்ரீசக்திதேவி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்கார பூஜை நடைபெற்றது. காலை 11மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பகல் 12மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

இரவு 8மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை கோயில் தர்மகர்த்தா க. கணபதி தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here