வல்லநாடு அருகே இறந்த காவலருக்கு இளைஞர் காங்கிரஸ் பொதுசெயலாளர் இரங்கல்

0
672
uoorvasi amirtharaj

சாயர்புரம் 18

வல்லநாடு மணக்கரை கிராமத்தில் ரவுடியை பிடிக்க சென்ற போது நடந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தில் இறந்த பண்டாரவிளையை சேர்ந்த காவலருக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இன்று வல்லநாடு அருகே உள்ள மணக்கரை கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பதுங்கி இருந்த துரைமுத்து என்ற ரவுடியை போலீசார் பிடிக்க சென்றபோது அவன் அவர்களிடமிருந்து தப்பியோட முயன்ற நிலையில் காவலர்கள் நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசினார்.

இதில் காவலர் சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குண்டு வெடிப்பில் ரவுடி துரைமுத்துவும் உயிரிழந்தான். ரவுடியை பிடிக்க சென்ற காவலர் சுப்பிரமணியனுக்கு பண்டாரவிளைதான் சொந்த ஊராகும்.

இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்து. மேலும் அது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவலர் சுப்பிரமணியன் இறந்த சம்பவத்திற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் இரங்கல் தெரிவிதுள்ளார்.

மேலும் அவர் கூறும்போது, ‘’இது போன்று காவலர்கள் உயிரிழப்பு சம்பவம் நடைபெறாத வகையில் காவல் துறையினர் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையுடன் செயல்பட வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here