சாத்தான்குளம் எஸ்.ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்னன் மீது மேலும் 8 பிரிவில் வழக்கு

0
164
sathankulam news

சாத்தான்குளம் எஸ்.ஐக்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்னன் மீது மேலும் 8 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய் குளத்தைச் சேர்ந்த ராஜசிங் என்பவரை ஜெயக்குமார் கொலை வழக்கு தொடர்பாக மே மாதம் 18ஆம் தேதி கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர்.

பின்னர் அவரை கோவில்பட்டி சிறைச்சாலை அடைத்துள்ளனர் இந்த நிலையில் சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பாக கோவில்பட்டி சிறைச்சாலை விசாரணைக்கு சென்ற நீதிபதி பாரதிதாசனிடம் ராஜசிங் தன்னை சாத்தான்குளம் காவல் நிலையத்தில் வைத்து உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் பாலகிருஷ்ணன் கடுமையாக தாக்கியதாக புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து நீதிபதி ஹேமா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார் இந்த நிலையில் டிஜிபி இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து சாத்தான்குளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ் பாலகிருஷ்ணன் ஆகியோர் மீது 8 பிரிவில் வழக்குப்பதிவு செய்து செய்தனர்.

இதைத்தொடர்ந்து சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து ராஜசிங்கை சிபிசிஐடி ஆய்வாளர் சபிதா விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here