மத்திய அரசு வழிகாட்டுதலின்படி திரையரங்குகள் திறக்கப்படும் – அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ

0
187
minister kadambur

இந்திய சுதந்திர போராட்டத்தின் போது 1942ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி மகாத்மா காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை தொடங்கினார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ஆம் தேதி வெள்ளையனே வெளியேறு இயக்க நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடலையூரில் உள்ள வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்ற தியாகிகள் நினைவு ஸ்தூபியில்

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு மலர் தூவி மரியாதை செய்தார். தொடர்ந்து எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்தில் ரூ10 லட்சம் மதிப்பில் புனரமைப்பு செய்யப்பட்ட பகுதியை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, விளாத்திகுளம் தொகுதி எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர் செ ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று ஆங்கிலேயரின் சித்ரவதைக்கு உள்ளன கோவில்பட்டி அருகே உள்ள கடலையூர் கிராமத்தினை சேர்ந்த 34 தியாகிகளைப் போற்றும் வகையில் விரைவில் அரசு விழா அறிவிக்கப்படும்,இம்மாத இறுதியில் கொரோனா பணிகள் ஆய்வு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்க முதல்வர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தர‌ உள்ளார்.திரையரங்கு திறப்பது குறித்து வரும் ஒன்றாம் தேதி மத்திய அரசு ஆலோசனை நடத்த உள்ளது, மத்திய அரசு என்ன வழிகாட்டுதல் சொல்கிறதோ அதன்படி திரையரங்குகள் திறக்கப்படும்.

கொரோனா பணிகள் குறித்து பா.ஜ.கவினர்‌ குறை சொன்ன நேரத்தில் மத்தியில் உள்ள பாஜக அரசு என்ன வழிமுறைகள் வகுத்து கொரோனா தடுப்பு பணிகளில் செய்ய சொல்கிறார்களோ, அதை வழிகாட்டுதல் படி தமிழகஅரசு கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது, ‌ இதில் குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று தமிழக முதல்வர் தெளிவான கருத்தை கூறியுள்ளார்.

நாம் சமூக இடைவெளி கடைப்பிடிக்கும் கட்டத்தில் உள்ளோம்.கொரோனா‌ இன்னும் முற்றிலுமாக ஒழிக்கப்படவில்லை .அரசு எடுத்த நடவடிக்கையினால் கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here