திருச்செந்தூர் முருகன் கோவில் கடற்கரையில் தூய்மை பணி : கடலோர பாதுகாப்பு மரை போலீஸாரின் சேவை!

0
51
ticr news

தமிழக கடலோர காவல் படையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் கடற்கரையில் தூய்மை பணி நடை பெற்றது. கடலோர பாதுகாப்பு மரைன் போலீஸார் அந்த பணியில் ஈடுப்பட்டனர். மேலும் அதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் அவர்கள் வழங்கினர்.

தமிழக கடலோர காவல்படையின் வெள்ளிவிழாவை முன்னிட்டு கடலோர பாதுகாப்பு மரைன் போலீஸார் பல்வேறு நிகழ்ச்சிகளை செய்து வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவில் கடற்கரையை சுத்தம் செய்யும் பணியும் விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி மண்டல கடலோர பாதுகாப்பு குழு டி.எஸ்.பி.ராஜூ தலைமை வகித்தார். தூத்துக்குடி மரைன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், திருச்செந்தூர் கடலோர மரைன் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் கடலோர பாதுகாப்பு மரைன் போலீஸார், ஊர்காவல்படையினர் 30 பேர் கலந்து கொண்டனர். கடற்கரையில் தூய்மை பணியிலும் ஈடுபட்டனர்.-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here