ஜெயலலிதா வெற்றிடத்தினை இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் யாராலும் நிரப்பமுடியாது – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ

0
18

கோவில்பட்டியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசுகையில்

அதிமுக, ஜெயலலிதா பற்றி பேச திருமாவளவனுக்கு தர்மீக உரிமை இல்லை,அவர் திமுக கூட்டணியில் இருப்பதால் மு.க.ஸ்டாலின் பற்றி பேசலாம் என்றும்,ஜெயலலிதாவின் வெற்றிடத்தினை யாராலும் நிரப்ப முடியாது,அதிமுகவின் நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தான், எம்.ஜீ.ஆர்.ஜெயலலிதாவை நாங்கள் மானசீக குருவாக ஏற்று இந்த அரசு நடைபெற்று வருகிறது.ஆகையால் தான் இன்றைக்கு அதிமுகவில் பொது செயலாளர் பதவி உருவாக்கப்படவில்லை என்றும், ஜெயலலிதா வெற்றிடத்தினை இன்றைக்கு மட்டுமல்ல என்றைக்கும் யாராலும் நிரப்பமுடியாது. ஜி.எஸ்.டிவரி வரும் போது பல்வேறு விமர்சனங்கள் வந்த போதிலும் , இன்று ஒரே நாடு ஒரே வரி என்ற பெயரில் அமுல்படுத்தப்பட்டுள்ளது.ஒரே நாடு ஒரு ரேசன் கார்டு திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு பிரச்சினை இருந்தால் அது பற்றி கூறலாம் என்றும், திட்டம் வருவதற்கு முன்பு கூறுவது வைகோ அரசியலுக்காக அரைவேக்காட்டு தனமாக கூறக்;கூடாது என்றும், வைகோவிற்கு எம்.பி. திமுக வழங்கவுள்ளது அதற்காக அவர்களை திருப்தி படுத்த அவர் பேசி இருக்கலாம், மாநில அரசுகள் அதிகாரங்கள் பறிக்கப்படு நிலை வந்தால் அதிமுக குரல் கொடுக்கும்,நீட் தேர்வுக்கு இறுதி வரை பேராரடியது குரல் கொடுத்தது இந்த அரசு தான், காவிரி பிரச்சினையில் நாடாளுமன்றத்தினை 50 நாள் முடங்கியது அதிமுக எம்.பி.கள் தான் என்றும், எந்த நேரத்திலும் மாநில அரசுகளின் உரிமை விட்டு தர அதிமுக அரசு சம்மதிக்காது என்று, தங்கதமிழ்செல்வன் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்லவில்லை, அமமுகவில் இருந்து சென்றுள்ளார் என்பதால், அது பற்றி டி.டிவி.தினகரன் தான் கூற வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here