சூளைவாய்க்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ரத்ததான முகாம்

0
87
soolaivaaikkal

ஸ்ரீவைகுண்டம், செப்.2:

சூளைவாய்க்காலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரின் ரத்ததான முகாம் நடந்தது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பேரிடர் காலத்தில் நோயாளிகளுக்கு உதவிடும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாவட்டம்தோறும் ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி, தூத்துக்குடி மாவட்டம் சூளைவாய்க்கால் கிளை சார்பில் ரத்த தான முகாம் மாவட்ட செயலாளர் அஸாருதீன் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட பேச்சாளர் அய்யூபுல் அன்சாரி, தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவர் சாந்தி, வட்டார சுகாதார ஆய்வாளர் கற்பகம் ஆகியோர் முன்னிலை வகித்து ‘ரத்ததானம் செய்வதால் ஏற்படும் பயன்கள்’ குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். ஏரல் சப்&இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ரத்த தான முகாமினை துவக்கி வைத்தார்.

ரத்த தான முகாமில் ஒரு பெண் உட்பட மொத்தம் 33பேர் பங்கேற்று ரத்த தானம் செய்தனர். இதில், மாவட்ட துணைத்தலைவர் தமீம்அன்சாரி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, மருத்துவ அணி செயலாளர் ரஷீத்காமில், மாவட்ட துணைச்செயலாளர் சிக்கந்தர் மீரான், சூழவாய்க்கால் கிளை செயலாளர் அய்யூபுல் அன்சாரி, கிளை தலைவர் கஸ்ஸாலி, துணைத்தலைவர் பாஸித், துணை செயலாளர் ஜாவித் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், கிளை பொருளாளர் இம்ரான் நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here