கொரோனா சிகிச்சை பெற்று வந்த காவல்துறையினர் – மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் வாழ்த்து

0
59
police news

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய தூத்துக்குடி மாவட்ட காவல் துறையினர் 22 பேருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நிலையில் அவற்றை எதிர்கொண்டு பொதுமக்களை காப்பதில் முன் களப்பணியாளர்களில் காவல்துறையின் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தாளமுத்துநகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி, மாட்ட காவல் கட்டுப்பாட்டு அறை உதவி ஆய்வாளர் ஞாதோஸ், தூத்துக்குடி தெற்கு காவல் நிலைய காவலர் செந்தில்குமார் தூத்துக்குடி மத்திய போக்குவரத்துப் பிரிவு தலைமைக் காவலர் செல்வராஜ், வடபாகம் காவல் நிலைய பெண்காவலர் தங்க பூபதி, புதியம்புத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் வீரபெருமாள், திருச்செந்தூர் காவல் நிலையம் முதல் நிலை காவலர் மாரிச்செல்வம், காவலர் குசன், ஆறுமுகநேரி காவல் நிலையம் உதவி ஆய்வாளர் முகமது பைசல், சிறப்பு உதவி ஆய்வாளர் பாபுராஜ், பெண் தலைமை காவலர் கல்பனா,

ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஆனந்தபூமாரி, மணியாச்சி காவல்நிலைய பெண் முதல் நிலை காவலர் திருமதி பாரதி, கயத்தார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகன் மாசார்பட்டி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சத்தியசீலன், நாசரேத் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், தூத்துக்குடி ஆயுதப்படை பெண் முதல் நிலை காவலர் பபிதா, காவலர்கள் காளிராஜ், முத்துகிருஷ்ணன், ராஜ், முகமது சபிக், சந்தோஷ் குமார் ஆகியோர் களப்பணியாற்றும் போது கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேற்படி 22 காவல்துறையினருக்கு இன்று (08.09.2020) மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பழக்கூடை வழங்கி ‘கொரோனா தொற்று நோய் மக்களுக்கு பரவாமல் தடுக்க தைரியமாக தாங்கள் முன்வரிசையில் நின்று சிறப்பாக பணியாற்றினீர்கள் அப்பணியில் கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளாகி தற்போது அதனின்று மீண்டு வந்துள்ளீர்கள் சவாலான பணியினை தைரியத்தோடும், அர்ப்பணிப்பு உணர்வோடும் தாங்கள் மேற்கொண்டது மிகவும் பாராட்டுதலுக்குரியது. தங்கள் துணிவையும், தங்கள் குடும்பத்தாரின் ஒத்துழைப்பையும் எண்ணி தூத்துக்குடி மாவட்ட காவல்துறை பெருமிதம் கொள்கிறது” என்று வாழ்த்தி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோபி உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here