நாசரேத்,டிச.05:நாசரேத் நகர அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நாசரேத் நகர அதிமுக செயலாளர் கிங்ஸ்லி தலைமையில் முன்னாள் ஆழ்வார்திருநகரி ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் ஞானையா முன்னிலையில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 3-வது ஆண்டு நினைவு தினம் நாச ரேத் கே.வி.கே. சாமி சிலை பஜார் அருகில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அனுசரிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பெரியதுரை, தினகரன், முருகேசன், ஜெபா, கணேசன், ரவீந்திரன், சிவசுப்பு, மாயாண்டி, ராஜ்குமார், அர்ஜுன் சங்கர், கோபால், அகஸ்டின், ஏ.இ.ராஜன், மனோ, அரசை கணேசன், மூக்குப்பீறி காமராஜ், சண்முகம், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.