நாலுமாவடி மோகன் சி லாசரஸிடம் ஆசி பெற்றார் அனிதாராதாகிருஷ்ணன் !

0
259
anitharadhakrishanan

நாசரேத்,செப்.19:திருச்செந்தூர் தொ குதி சட்டமன்ற உறுப்பினர் அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் 68- வது பிறந்தநாளை முன்னிட்டு நாலுமாவடி மோகன் சி. லாசரஸ், நாசரேத் சி.எஸ்.ஐ. பாதிரியார் இஸ்ரவேல் ஞானராஜ் ஆகியோரை சந்தித்து ஆசி பெற்றார்.

திருச்செந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரு மான அனிதா ஆர்.இராதாகிருஷ்ணன் 68- வது பிறந்தநாள் விழாவினை முன் னிட்டு தண்டுபத்து அய்யா நிழல் தாங் கலில் தனது மனைவி ஜெயந்தியுடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் குலசேகரன் பட்டணம் அருள்மிகு முத் தாரம்மன் திருக்கோவில், திருச்செந் தூர் அருள் மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், வீரபாண்டியபட்டணம் சிலுவை கோவில், காயல்பட்டணம் தர்கா நாசரேத் தூய யோவான் பேரா லயம் உள் ளிட்ட கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்தார். நாசரேத் தூய யோவான் பேராலயத்தில் உதவிகுரு இஸ்ரவேல் ஞானராஜ் சிறப்பு ஜெபம் செய்தார்.

பின்னர் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார்ஊழியநிறுவனர் சகோ. மோகன் சி லாசரஸ் இடம் சிறப்பு ஜெபம் செய்தார். அவருக்கு மோகன் சி.லாசரஸ் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சி யில் நாசரேத் தூய யோவான் பேராலய சபை ஊழியர் ஜெபசிங், மாநில திமுக மாணவரணி துணை அமைப்பாளர் உமரிசங்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.டி.கே.ஜெயசீலன், திமுக மாவட்ட அவைத்தலைவர் அருணாச் சலம், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் இராம ஜெயம், நாசரேத் நகர திமுக செயலாளர் ரவி செல்வக்கு மார், பரமன்குறிச்சி கிளை செயலாளர் இளங்கோ, ஒன்றிய செயலாளர்கள் நவீன்குமார்,செங்குழி ரமேஷ்,பாலசிங், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அமைப் பாளர் பேரின்பராஜ், ஒருங்கிணைப்பா ளர் ராஜ்குமார்,

மாவட்ட மாணவரணி துணை செயலாளர் அருண் சாமுவேல் என்ற தம்பு, நாசரேத் நகர திமுக பொரு ளாளர் சுடலைமுத்து, திமுக மாவட்ட பிரதிநிதிகள் அன்பு தங்கபாண்டியன், சாமுவேல்,அலெக்ஸ் புரூட்டோ,நாசரேத் நகரதிமுக தொண்டரணி அமைப்பாளர் ஞானராஜ், நாசரேத் நகர இளைஞரணி அமைப்பாளர் பிரதீப், ஒன்றிய மகளி ரணி அமைப்பாளர் இந்திரா,நகர மகளி ரணி அமைப்பாளர் கஸ்தூரி, வார்டு பொறுப்பாளர்கள் கருத்தையா, சிலாக் கியமணி, ஜேஸ்பர், முன்னாள் வார்டு கவுன்சிலர் தேவதாஸ், நகர நெசவாளர் அணிஅமைப்பாளர் ஆபிரகாம்,ஜேம்ஸ், சுரேஷ்,ஜோஸ் சுந்தர், முன்னாள் திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜமீன் சால மோன்,வழக்கறிஞர் கிருபாகரன் ஆகி யோர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here