தூத்துக்குடி மாவட்ட சத்துணவு மையங்களில் 22 சத்துணவு அமைப்பாளர் காலி பணியிடங்கள் – மாவட்ட கலெக்டர் தகவல்!!

0
506
thoothukudi collector

தூத்துக்குடி மாவட்டத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளி சத்துணவு மையங்களில் ஏற்பட்டுள்ள 22 அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு 03.10.2020 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 வரை விண்ணப்பங்கள் பெறப்படும். அமைப்பாளர் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 21 வயது பூர்த்தியடைந்தும் குறிப்பிட்ட தேதியில் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.

விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் 20 வயது பூர்த்தியடைந்தும் 40 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும். காலியாகவுள்ள பணியிடங்கள் அரசாணையின் படி நிரப்பப்படும். கல்வித் தகுதி,இருப்பிடம், சாதி, கிராம நிர்வாக அலுவலரால் வழங்கப்பட்ட தூரச்சான்று, விதவை /கணவரால் கைவிடப்பட்டோர் இதர முன்னுரிமை ஆகியவற்றுக்கான ஆதாரச்சான்று நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

நியமன பணியிடத்திற்கும் விண்ண்பதாரர் குடியிருக்கும் இடத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ-க்குள் இருக்க வேண்டும். (நகராட்சி/ குக்கிராமம் / வருவாய் கிராமம் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படமாட்டாது). காலியிடமுள்ள பள்ளி, பள்ளிகளுக்கான இனசுழற்சி விவரம் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி அலுவலகங்களில் ஒட்டப்பட்டிருக்கும். விண்ணப்பநகல் சம்மந்தப்பட்ட அலுவலகங்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணிவரை இலவசமாக வழங்கப்படும்.

பூர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள் சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களுக்கு 03.10.2020 முடிய அலுவலக வேலை நாட்களில் அனுப்பப்படவேண்டும். 03.10.2020 மாலை 5.45-க்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

வயது வரம்பு 31.08.2020ம் தேதியினை அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படும். மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்களை தொடர்பு கொள்ளவும். விண்ணப்பங்கள் உரிய பரிசீலனைக்கு பின் தகுதி வாய்ந்த மனுதாரர்களுக்கு மட்டுமே நேர்முக தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்படும்.

அழைப்பாணையில் தெரிவிக்கப்படும் தேதியில் குறிப்பிட்ட இடத்தில் நேர்முக தேர்வுக்கு மனுதாரர் அசல் ஆவணங்களுடன் ஆஜராக வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here