தூத்துக்குடி தொழிலதிபர் தலைமையில் 300 பேர் – பா.ஜ.க வில் இணைந்தனர்

0
15
bjp news

தமிழகத்தில் சட்ட மன்றத் தேர்தல் விரைவில் வர இருக்கிற நிலையில், அரசியல் கட்சியினர், அவர்கள் தங்களுடைய செல்வாக்கை அதிகப்படுத்துவதற்கும் தக்க வைப்பதற்கும் போராட துவங்கிவிட்டனர். அதுமட்டுமில்லாமல் தமிழகத்தை பெரியார் மண் என்று நாஸ்திகம் பேசும் திராவிட கட்சிகள் ஒருபுறம் உரிமை கொண்டாட, ஆன்மிக அரசியலை முன்னெடுக்க முயற்சி செய்வோர், தமிழகம் ஆழ்வார்கள், நாயன்மார்கள் பிறந்த மண் என்று இன்னொருபுறம் உரிமை கொண்டாடிவருகிறார்கள்.

அதுபோல் தமிழகத்துக்குள் பாஜகவை வரவேவிடமாட்டோம் என்று சில அரசியல் கட்சிகள் கங்கனம் கட்ட, இந்த முறை பாஜக உறுப்பினர்கள் தமிழக சட்ட மன்றத்துக்குள் நிச்சயம் செல்வார்கள் என்று பாஜக தலைவர்கள்பேசி வருகிறார்கள். அதோடு விடாமாடல் மாற்று கட்சியினர், தொழிலதிபர்கள், இளைஞர்களை இணைக்கும் வேலையில் பாககவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

இதற்கிடையே தூத்துக்குடியில் இன்று தொழிலதிபர் A. கமலக்கண்ணன் தலைமையில் 300 க்கும் மேற்பட்டவர்கள் பாஜகவில் இணைந்தனர். அந்நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் P.M.பால்ராஜ் தலைமை வகித்தார். பாஜக வணிகர் பிரிவு மாநில தலைவர் A.N.ராஜகண்ணன் மற்றும் மாநில சிறுபான்மையினர் அணி செயலாளர் J.V அசோகன் முன்னிலை வகித்தனர். புதிதாக இணைந்த உறுப்பினர்களுக்கு மாட்ட தலைவர் P.M.பால்ராஜ் பொன்னாடை அணிவித்து கௌரவித்து உறுப்பினர் அனையாள அட்டை வழங்கினார் .

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொது செயலாளர் VSR பிரபு , மாவட்ட செயலாளர்கள் T. ரவிச்சந்திரன் , திரு மான்சிங் , மாநில செயற்குழு உறுப்பினர் M.R கனகராஜ் , மாநில பொதுக்குழு உறுப்பினர் V. S. இசக்கிமுத்து ,வணிகர் பிரிவு மாநில செயலாளர் சத்தியசீலன் , OBC பிரிவு மாநில செயலாளர் விவேகம் G.ரமேஷ், வணிகர் பிரிவு மாவட்ட செயலாளர் K பழனி வேல் , பால பொய்சொல்லான் ,

தகவல் தொழில்நுட்பம் பிரிவு மாவட்ட தலைவர் N. இரத்தினமுரளி , இளைஞர் அணி மாவட்ட தலைவர் விக்னேஷ்குமார் , வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் மகேந்திரன் , வடக்கு மண்டல் பொதுச்செயலாளர் C. செல்லப்பா, கிழக்கு மண்டல் தலைவர் S. சந்தனக்குமார் , மேற்கு மண்டல் தலைவர் ராஜவேல், வடக்கு மண்டல் தலைவர் கனகராஜ் , சக்திகேந்திர பொறுப்பாளர்கள் M. நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here