தட்டார்மடம் அருகே சமீபத்தில் கொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் திடீர் மரணம்

0
11
sathankulam

தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் காவல் நிலைய எல்கைக்கு உட்பட்ட சொக்கன் குடியிருப்பை சேர்ந்த செல்வன் கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கு சம்மந்தமாக தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மற்றும் அதிமுக நிர்வாகி திருமணவேல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கொலை செய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத், கொலைக்கான காரணம் குறித்து புகார் தெரிவித்திருந்தார். கொலை வழக்கை சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் எலிசபெத் மகன் செல்வன் இறந்த நாளில் இருந்து துக்கம் தாங்காமல் சோர்வில் காணப்பட்டார். சோகத்தில் மூழ்கி இருந்த செல்வனின் தாயார் எலிசபெத், சற்று முன் உடல் நிலை மோசமாகி உயிரிழந்தார். இது குறித்து தட்டார்மடம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here