சாத்தான்குளம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வாக்காளர் பூத் கமிட்டி உறுப்பினர் படிவம் வழங்கல்

0
83
congress

சாத்தான்குளம், அக். 8:

சாத்தான்குளம் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வாக்காளர் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கை படிவம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக தமிழ்நாடு முழுவதும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அதன்படி ஸ்ரீவைகுண்டம் சட்டபேரவை தொகுதியில் மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலர் ஊர்வசி அமிர்தராஜ் ஆணையின்படி தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தலைவர் ஸ்ரீராம் ஆலோசனைப்படி தொகுதி முழுவதும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன.

அதன்படி சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் 13 பூத் கமிட்டிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சாத்தான்குளம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்குரைஞர் வேணுகோபால் சேர்க்கை படிவத்தைஆத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் பாலசிங் வழங்கினார். அப்போது சிறப்பூர்நேசகுமார், மகாராஜன் ஓய்வு பெற்ற ஆசிரியர் கணபதி ஆகியோர் உடன்இருந்தனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here