தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் கடைசி சனி கிழமை வழிபாட்டில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழ் மாதங்களில் வரும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் வேண்டும் வரங்கள் யாவும் கிட்டும் என்பது ஐதீகமாகும். எனவே புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கமாகும்.

இதன்படி புரட்டாசி சனிக்கிழமை தோறும் தூத்துக்குடி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. புரட்டாசி மாதத்தின் கடைசி சனியான நேற்று தூத்துக்குடி பெருமாள் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலையிலேயே கோவிலுக்கு அதிகளவில் வந்த பக்தர்கள் வந்திருந்தனர்.
கோ பூஜையுடன் சிறப்பு வழிபாடுகள் துவங்கியது. தொடர்ந்து அபிஷேகம், ஆராதனையும் அதனைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடந்தது. கடைசி சனியை முன்னிட்டு பெருமாள் திருப்பதி வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.
சிறப்பு அலங்காரத்தில் ஜொலித்த பெருமாளை பக்தர்கள் குடும்பத்தினருடன் வணங்கி சென்றனர். கொரோன வைரஸ் பரவல் காரணமாக தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் அரசின் அறிவுறுத்தல்படி முககவசம் அணிந்தும், குறிப்பிட்டபடி தனிமனித இடைவெளியை கடைபிடித்தும் வழிபாட்டில் பங்கேற்றனர்.