அ.தி.மு.க 49வது ஆண்டுவிழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் கிரிக்கெட் போட்டி

0
198
admk news
????????????????????????????????????

சாயர்புரம் : 13

அ.தி.மு.க 49வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நடந்த கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா சிவத்தையாபுரம் ஆனந்த விநாயகர் கோவில் திடலில் நடந்தது.

அ.தி.மு.க கட்சியின் 49வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு சிவத்தையாபுரத்தில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. வாரந் தோறும் நடந்த இந்த போட்டியில் 40 அணிகள் கலந்து கொண்டனர். இறுதி போட்டியில் உடன்குடி ஆர்.எஸ் கிளப் அணி மற்றும் சிவத்தையாபுரம் நண்பர்கள் குழு அணி ஆகியவை மோதின.

இதில் உடன்குடி ஆர். எஸ் கிளப் அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டி சென்றது. சிவத்தையாபுரம் இளைஞர் குழு அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா சிவத்தையாபுரம் ஆனந்த விநாயகர் கோவில் திடலில் நடந்தது. இந்த விழாவிற்கு சிவத்தையாபுரம் ஊர் நலக் கமிட்டி தலைவர் சாமிநாதன், தொழிலதிபர் பரமசிவன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அ.தி.மு.க ஸ்ரீவைகுண்டம் கிழக்கு ஒன்றிய செயலாளரும், மாவட்ட கவுன்சிலருமான அழகேசன் மற்றும் காண்ட்ராக்டர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்க துணை தலைவர் சரவணக்குமார், ராஜு வரவேற்றுப் பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன் மகன் வழக்கறிஞர் எஸ்.பி.எஸ். ராஜா கலந்து கொண்டு அவரது சார்பில் முதலிடம் பிடித்த உடன்குடி ஆர்.எஸ். கிளப் அணிக்கு ரொக்க பரிசு ரூ15ஆயிரம் மற்றும் பரிசு கோப்பை வழங்கினார்.

இரண்டாம் இடம் பிடித்த சிவத்தையாபுரம் நண்பர்கள் குழு அணிக்கு கோப்பை மற்றும் ரொக்க பரிசு வழங்கப்பட்டது. கிரிக்கெட் போட்டிக்கான ஏற்பாடுகளை சத்தியன் மற்றும் மாரி மாதவன் ஆகியோர் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here