பாஞ்சாலங்குறிச்சியில் வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு தினம்

0
79
kattapomman

தூத்துக்குடி

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள அவரது நினைவுகோட்டையில் திருவுருவச்சிலைக்கு வம்சாவளியினர், சந்ததியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ளது வெள்ளையரை எதிர்த்து போரிட்ட வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை. கட்டபொம்மனின் 221 ஆவது நினைவு தினமான இன்று, நினைவு கோட்டையிலுள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வீரசக்கதேவி ஆலய குழு தலைவர் முருகபூபதி தலைமையில் வீரபாண்டிய கட்டபொம்மன் சந்ததியர் மற்றும் வம்சாவளியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதுபோல் தூத்துக்குடி மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் சீனிவாசன் தலைமையிலான அலுவலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். கரோனா ஊரடங்கு தடை அமலில் உள்ளதால் பொதுமக்கள் மரியாதை செலுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து வீரபாண்டிய கட்டபொம்மனின் சந்ததியினர் செய்தியாளர்களிடம் பேட்டி அளிக்கையில், ‘’வீரபாண்டிய கட்டபொம்மனின் 221-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி அவருடைய உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி வழிபாடு செய்தோம். இந்த வேளையில் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றை வைக்க விரும்புகிறோம். சென்னையில் வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவச் சிலையை நிறுவுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஞ்சாலங்குறிச்சி ஊரில் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் வம்சாவழியினர் 202 குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், பிற சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த பொது மக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திட தூத்துக்குடி மாவட்டத்தில் தொழிற்சாலைகள் அமைத்து பணியிடங்களை ஏற்படுத்தி தர வேண்டும்’’ என கேட்டுக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here