வீரபாண்டிய கட்டபொம்மன் 221 வது நினைவு தினம் : கயத்தாறு நினைவிடத்தில் அனுசரிப்பு

0
9
kattapomman news

வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 வது நினைவு தினத்தை முன்னிட்டு,கயத்தாறு நினைவிடத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் சார்பில் மாலை அணிவித்து,மலர் தூவி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரருமான வீரபாண்டிய கட்டபொம்மனின் 221 வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, மாவட்ட ஆட்சியர் நந்தீப் நந்தூரி ,விளாத்திகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆகியோர் மாலை அணிவித்து ,மலர்தூவி மரியாதை செய்து நினைவு தினத்தை அனுசரித்தனர்.

மேலும் மதிமுக தூத்துக்குடி வடக்கு தெற்கு மாவட்ட செயலாளர்கள் ஆர்.எஸ்.இரமேஷ், புதுக்கோட்டை செல்வம், நெல்லை மத்திய மாவட்ட செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் உவரி ரைமண்ட் ,தூத்துக்குடி மாநகரச் செயலாளர் முருகபூபதி ,தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசுப்பிரமணியன்,துணை செயலாளர் வீர பொம்மு துரை, மாணவரணி துணை அமைப்பாளர் சரவணப்பெருமாள், பாஜக தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ்,தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் கதிர்வேல், பாமக, திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும்,

விடுதலைக்களம் நிறுவனத் தலைவர் கொ.நாகராஜன், தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தை சேர்ந்த சங்கரவேலு, வலசை கண்ணன், முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ் உள்ளிட்ட அமைப்பினர், கட்டபொம்மன் வம்சாவழியினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு மாலை அணிவித்து ,மலர்தூவி மரியாதை செய்து நினைவு தினத்தை அனுசரித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here