ரயில்வே தண்டவாளப் பொருட்கள் திருடியவர்கள் கைது

0
8
arrusst

ரயில்வே தண்டவாளப்பகுதிகளில் இரும்பு பொருட்களை திருடியவர்களை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படையினர் தூத்துக்குடி முதல் வாஞ்சிமணியாச்சி வரையிலான ரயில் வழித்தடங்களில் ஆய்வு செய்தபோது தண்டவாளங்களிலுள்ள இரும்புபொருட்கள் திருடப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.

இரும்புபொருட்களை திருடியவர்களை கைது செய்திட தென்னக ரயில்வே பாதுகாப்பு படை ஐ.ஜி., பிரேந்திரகுமார் மற்றும் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்பு படை கமிஷனர் அன்பரசு உத்தரவின்பேரில் தூத்துக்குடி ரயில்வே பாதுகாப்பு படை சப்&இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் மதுரை கோட்ட ரயில்வே பாதுகாப்புபடை குற்ற புலனாய்வு பிரிவு சப்&இன்ஸ்பெக்டர் பாலச்சந்திரன் மற்றும் தலைமைக்காவலர்கள் சங்கரபாண்டி, சுரேஷ்குமார், முருகானந்தம், சுரேந்திரன், ஜெயக்குமார், செந்தில்முத்து ஆகியோர் ரயில் வழித்தடப்பகுதிகளில் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

சம்பவத்தன்று இரவு தட்டப்பாறை பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்புபொருட்களை திருடிய தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த பொன்ராஜ் மகன் இசக்கிவேல்(வயது45), மற்றும் அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், திருடிய ரயில்வே இரும்பு பொருட்களை வாங்கிய தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தை சேர்ந்த இரும்புக்கடை உரிமையாளர் அய்யப்பனையும்(43) ரயில்வே பாதுகாப்பு படையினர் கைது செய்து தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவில்பட்டி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here