நாலுமாவடி வாய்க்காலில் அமலைச் செடிகள் அகற்றம் – இயேசு விடுவிக்கிறார் ஏற்பாடு

0
12
nalumavadi

நாசரேத், அக்.18:நாலுமாவடி வாய்க்காலில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் குளங்களுக்கு தண்ணீர் செல் வதில் சிரமம் ஏற்பட்டதை நாலுமாவடி இயேசு விடுவிக் கிறார் ஊழிய அலுவலகப் பணியாளர்கள் ஜெ.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் அமலைச் செடிகளை 2-வது நாளாக அகற்றினர்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனமும், புதுவாழ்வு சங்க மும் இணைந்து நாலுமாவடி வாய்க்காலில் அமலைச் செடிகள் ஆக்கிரமிப்பால் குளங்களுக்கு தண்ணீர் செல் வதில் சிரமம் ஏற்பட்டதால் நாலுமாவடி சுற்று வட்டார விவசாயிகள் மிகுந்த கவலையுடன் காணப்பட்டனர். இதுகுறித்து கேள்விப்பட்ட நாலுமாவடி இயேசு விடு விக்கிறார்ஊழியநிறுவனர் மோகன் சி.லாசரஸ் பொது மேலாளர் செல்வக்குமார், விவசாயிகளின் பிரதிநிதி மணத்தி எட்வின் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தி அமலைச்செடிகளை அப்புறப்படுத்தி கொடுக்க ஆவண செய்ய கேட்டுக் கொண்டார்.

இதன் பேரில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய அலுவலக பணியாளர் கள் ஜெ.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் அமலைச் செடிகளை 2-வது நாளாக அகற்றினர்.கடம்பாகுளம் தலைமதகில் இருந்து சுமார் 3 கி.மீ. தூரமுள்ள நாலுமாவடி வாய்க்காலில் சூழ்ந்துள்ள அமலைச் செடிகளை நாலுமாவடி இயேசு விடு விக்கிறார் ஊழிய அலுவலக பணியாளர்கள் அகற்றினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here