கடம்பாகுளம் கால்வாய் தூர் வாரும் பணி – மோகன் சி.லாசரஸ் துவக்கி வைத்தார்

0
162
mohanclazare

நாசரேத், அக்.22: நாலுமாவடி அருகே புறையூர் கிராமத்தின் வழியாக கடம் பாகுளத்தில் இருந்து செல்லும் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் ஆன கால்வாய் தூர் வாரும் பணியை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 900 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பட வழிவகை செய்து கொடுத்ததால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடி அருகிலுள்ள புறையூர் கிராமத்தின் வழியாக கடம்பாகுளம் 9-ஆம் எண் மடையில் இருந்து செல்லும் ஏழு கிலோ மீட்டர் தொலைவிலான கால்வாயை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி லாசரஸ் தூர் வாரி 900 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்படுமாறு வழிவகை செய்து கொடுத்தார். இந்த கால்வாய் வழியாக செல்லும் நீரானது புறையூர், மேல கல்லாம்பாறை, கீழகல்லாம்பாறை, குட்டித்தோட்டம்,பன்னீர்புரம்,நெட்டை யன்காலணி,மணத்தி,

சோழியக் குறிச்சி, சுகந்தலை மற்றும் இதனைச் சுற்றியுள்ள ஊர்களைச் சேர்ந்த விவசா யிகள் இதன் மூலம் பயன் பெறுவார் கள் எனவும் உலகத்தை கடவுள் படைத்த போது முதலில் மனிதனுக்கு கொடுத்த தொழில் விவசாயம் எனவும் விவசாய நிலங்களை பண்படுத்தி பயன்படுத்தினார்கள் என வேத வச னம் உள்ளது என்று கூறி தூர் வாரும் பணிகளை சகோதரர் மோகன் சி லாசரஸ் ஜெபித்து துவக்கி வைத்தார். இப்பகுதி விவசாயிகள் அனைவரும் அன்புடன் அவரை வரவேற்று நன்றி செலுத்தினர். இதனால் இப்பகுதி விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந் தனர்.

இந்நிகழ்வினை மோகன் சி லாசரஸ் ஜெபித்து கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் புறையூர் பஞ்சாயத்து தலைவர் செல்வக்குமார், தம்பிரான், பூபதி, மணத்தி ராமையா, கல்லாம்பாறை ஆறுமுகம், சோழியக் குறிச்சி பலவேசம் உள்பட கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாலுமாவடிஇயேசு விடுவிக்கிறார் ஊழிய பொது மேலாளர் செல்வக்குமார் தலைமை யில் ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் விவசாயிகள் செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here