கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அய்யலுசாமி மரணம்

0
22
aiyalusamy

கோவில்பட்டி முன்னாள் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அய்யலுசாமி(92) .இன்று அதிகாலை இயற்கை எய்தினார். தோழரின் இறுதி ஊர்வலம் மாலை 5 மணி அளவில் அவரது சொந்த ஊரான பெருமாள்பட்டி கிராமத்தில் நடைபெறுகிறது. 1996 -2001ம் ஆண்டில் கோவில்பட்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும், மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு போன்ற பல்வேறு பொறுப்புகள் வகித்துள்ளார்.

நில அடமான வங்கியின் கூட்டுறவு தலைவராகவும் பெருமாள்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராகவும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில தலைவராகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராகவும் பல்வேறு பொறுப்புகளில் மக்கள் பணியாற்றி இருக்கிறார். பொதுவாழ்வில் எளிமை நேர்மை தூய்மை இவற்றினை எள்ளவும் குறையாத அளவில் கடைப்பிடித்து வாழ்ந்தவர்.

கோவில்பட்டியில் விவசாயிகள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தினார். மேலும் வரிகொடா இயக்கத்தில் விவசாயிகளை திரட்டி போராட்டங்கள் நடத்தி வெற்றி பெற்றவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here