பொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள்

0
71
pottalkadu news

தமிழ்நாடு அரசு மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் மதர் சமூக சேவை நிறுவனத்தின் மூலமாக பொட்டல்காடு கிராமத்தினருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு இந்தியன் ஆயில் கார்ப்£ரேஷன் நிறுவனத்தின் தென்மண்டல செயல் இயக்குனர் நானாவாரேர் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் சிம்ரன் ஜித்சிங், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வன், ஸ்பிக் உர தொழிற்சாலை துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதன்மை பொதுமேலாளர் தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் பஞ்சாயத்து தலைவர் வள்ளியம்மாள்சந்தனம் வரவேற்றார்.

விழாவில், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் 26பேருக்கு பசுமாடு, கன்றுகளையும், ஒருவருக்கு 2ஆடுகள் வீதம் 15பேருக்கு 30ஆடுகளையும், தமிழ்நாடு அரசு சார்பில் 3பேருக்கு முதியோர் உதவித்தொகை, 2பேருக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை மற்றும் 14பேருக்கு பசுமை வீடுகளையும் மற்றும் ஸ்பிக் உரத்தொழிற்சாலை நிறுவனத்தில் ஐ.டி.ஐ., டிப்ளமோ, பி.இ படித்த இளைஞர்களுக்கு வேலைக்கான ஆணையையும் வழங்கினார்.

இதில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் துணை பொதுமேலாளர் கௌதமன், முதுநிலை மேலாளர் முருகேசன், மேலாளர் ரமேஷ்பாபு, கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர்.சுரேஷ், தாசில்தார்கள் ஜஸ்டீன் செல்லத்துரை, கைலாசகுமாரசாமி, ஆனையாளர் சித்தார்த்தன், பி.டி.ஓ., வசந்தா, கால்நடை உதவி மருத்துவர் ஆனந்தராஜ், கால்நடை ஆய்வாளர் சர்மிளா, வருவாய் ஆய்வாளர் ராதிகா, கிராம வளர்ச்சி அலுவலர் பேச்சிராஜா, மதர் சமூக சேவை நிறுவன பணியாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், மதர் சமூகசேவை நிறுவன இயக்குனர் கென்னடி நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here