தூத்துக்குடி முடிதிருத்தும் தொழிலாளி பொன். மாரியப்பனிடம் தமிழில் உரையாடினார் பிரதமர்

0
96
modi

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் பொன்.மாரியப்பன் இந்திரா தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள், பொன்.மாரியப்பனின் தந்தையும் சலூன் தொழில் செய்து வந்துள்ளார். 8ஆம் வகுப்புக்கு மேல் பள்ளி செல்லாத பொன்.மாரியப்பன் தூத்துக்குடி வழக்கறிஞரிடம் குமாஸ்தாவாக பணிபுரிந்துள்ளார். அப்போது வழக்கறிஞர் படிப்பின் முக்கியத்துவத்தையும் வாசிப்பின் முக்கியத்துவத்தையும் சொல்ல படிக்க இயலாததை நினைத்து மன வேதனை அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து தங்களது தொழிலாளன முடித்திருத்தகத்தை இப்பகுதியில் அமைத்துள்ளார். இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மற்றும் மாணவர்கள் பெரும்பாலும் கைப்பேசி வாட்ஸ் அப்பிலும் தொலைப்பேசியில் பேசி கொண்டும் இருப்பதை கண்ட அவர், வாடிக்கையாளர்களின் மனதை படிப்பின் அவசியத்தை அறிந்து கொள்ளவும் தேவையற்றதில் மூழ்காமல் இருக்கவும் தனது கடையில் நூலகத்தை அமைத்துள்ளார்.

கடையில் அரசியல் வேண்டாம் என்பதை நாசூக்காக வாடிக்கையாளர்களிடம் தெரிவிக்கும் பொன்.மாரியப்பன், வாசிப்பின் மூலம் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகத்தை பெற்றுள்ளார். புத்தகங்களே துணை என்ற தலைப்பில் அவர் பேசிய ஒலிப்பதிவை சலூனில் ஒலிப்பரப்பிய அவர், தொடர்ந்து சுகி.சிவம், நெல்லை கண்ணன், தமிழருவி மணியன், பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளை தவறாமல் ஒலிப்பரப்பி வருகிறார்.

தனது கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் நூலகம் குறித்தும் என்ன புத்தகம் படித்தீர்கள் உபயோகமானதாக இருந்ததா என்பதை கையேடு மூலம் பதிவிடவும் செய்கிறார். தனது சலூனில் அரசியல் தலைவர்களின் படத்தை தவிர்த்து திருவள்ளுவர், அப்துல்கலாம்,மகாத்மா காந்தி,விவேகானந்தர், மகாகவி பாரதி படங்கள் அலங்கரிக்கின்றன மேலும் பூஜை காலங்களில் தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தும் விதமாக பூஜைகள் செய்யும் இவர் கடவுள்களின் படத்தோடு அப்துல்கலாமின் படத்தையும் வைத்து பூஜை செய்கிறார் இந்த நூலக பொன்.மாரியப்பன்.

இந்நிலையில் மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக நாட்டு மக்களிடையே உரையாடி வரும் பிரதமர் மோடி, இன்று பொன். மாரியப்பனிடம் உரையாடினார். வணக்கம் நல்லா இருக்கீங்களா? என மாரியப்பனிடம் தமிழில் பேசிய பிரதமர் மோடி, பொன். மாரியப்பனிடம், முடி திருத்தகத்தில் நூலகம் அமைக்கும் எண்ணம் எப்படி வந்தது? என்று கேட்டார்.

அதற்கு பதிலளித்த பொன்.மாரியப்பன்: நான் 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்ததால் வாழ்க்கையை படிக்க நூலகம் அமைத்தாக தெரிவித்தார். பிரதமர் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்து கேட்டார். அதற்கு தான் மிகவும் பிடித்த புத்தகம் திருக்குறள் என தெரிவித்தார். பொன். மாரியப்பன், பிரதமரின் வாழ்த்துகள் உற்சாகப்படுத்தியதாக தெரிவித்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here