தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி நடத்திய கையெழுத்து இயக்க பேனரில் தமிழ்ப்பிழை

0
96
congress

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கையெழுத்து இயக்க பேனரில் தமிழ்ப்பிழையாக எழுதப்பட்டிருந்தது. எனவே இது தமிழ் கொலை என விமர்சிக்கப்பட்டு வருகிறது.

மத்தியரசின் வேளாண் சட்டதிருத்த மசோதாவை கண்டித்தும் அதை திரும்ப பெற வலியுறுத்தியும் காங்கிரஸ் கட்சி நாடுமுழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்தி எதிர்ப்பை பதிவு செய்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் அப்படிப்பட்ட கையெழுத்து இயக்க நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தூத்துக்குடியில் இன்று (26.10.2020)அதுபோன்ற கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டு கையெழுத்து இயக்கத்தைதொடங்கி வைத்தார். தூத்துக்குடி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஒரு பாதாகை(பேனர்) பிடித்து சென்றனர். அதில் SIGNATURE CAMPAIN என்று ஆங்கிலத்தில் ஒரு பெரிய வரியும் அடுத்து மோடி அரசு என்கிற பெரிய வரியும் அடுத்து கொண்டு வந்த ’வேளான் சட்டதிறத்த மசோதாவை திறம்ப பெற வலியுறுத்தி விவசாயிகளிடம்’ என்பது வரை சிறிய எழுத்துக்களில் மூன்று வரியும் பின்னர் கையெழுத்து இயக்கம் என அளவிலும் எழுதப்பட்டிருந்தது.

CAMPAIGN என்பதற்கு பதிலாக CAMPAIN என்றும் வேளாண் என்பதற்கு பதிலாக வேளான் என்றும் திருத்தம் என்பதற்கு பதிலாக திறத்த என்றும் திரும்ப பெற என்பதற்கு பதிலாக திறம்ப பெற என்றும் மூன்று வரிகளில் நான்கு தவறுகளோடு பேனர் கொண்டு செல்லப்பட்டது. இதை பார்ப்பவர்கள், ’கையெழுத்து இயக்கத்தில் நடந்த தமிழ் கொலை’ என்று விமர்சனம் செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here