தூத்துக்குடி மாவட்ட அமமுக சார்பில் போலீசாருக்கு 2ஆயிரம் முககவசங்கள்

0
15
ammuka

தூத்துக்குடி மாவட்ட அமமுக சார்பில் போலீசாருக்கு 2ஆயிரம் முககவசங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட அமமுக சார்பில், மாவட்டத்திலுள்ள போலீசாருக்கு கொரோனா பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளும் வகையில் 2ஆயிரம் முககவசம் மற்றும் 500கிருமிநாசினி பாட்டில்களை மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமாரிடம், மாநில அமைப்பு செயலாளர் ஹென்றி தாமஸ் வழங்கினார்.

இதில், மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் எட்வின்பாண்டியன், மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் சண்முககுமாரி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் விஜயலட்சுமி, அண்ணா நகர் பகுதி செயலாளர் ரூஸ்வெல்ட், மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் கார்த்திகைராஜன், மாவட்ட ஜெ.பேரவை இணைச்செயலாளர் ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி தாசன், வழக்கறிஞர் நம்பிராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here