பாபநாசம் அணையிலிருந்து மருதூர் கால்வாய் வழியாக தண்ணீர் திறந்து விட விவசாயிகள் கோரிக்கை

0
65
sathankulam

சாத்தான்குளம், அக். 28:

பாபநாசம் அணையிலிருந்து மருதூர் கால்வாய் வழியாக புத்தன்தருவை, வைரவம்தருவை குளத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என சாஸ்தாவிநல்லூர், படுக்கப்பத்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

சாத்தான்குளம் பகுதி வானம் பார்த்த பூமி என்பதால் குளம், மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம் விவசாயம் நடந்து வருகிறது. இப்பகுதியில் மழை பொய்த்து போனதால் இப்பகுதியில் உள்ள குளம் மற்றும் கிணறுகள் வறண்டு காணப்படுகிறது. தட்டார்மடம் பகுதியில் பல விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து முருங்கை, வாழை பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வைரவம் தருவை,புத்தன்தருவை குளங்கள் நீர்பிடிப்பு குளங்களாக காணப்படுகிறது. மழை அளவு குறைந்து போனதால் தற்போது இப்பகுதியில் உள்ள நிலத்தடி நீர்மட்டம் கடல் மட்டத்துக்கு சென்று விட்டது.

இதனால் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாயத்தை காப்பாற்ற குளங்களுக்கு தண்ணீர் விட வலியுறுத்தி வருகின்றனர். தற்போது பாபநாசம் அணையில் 110 அடிக்கு மேல் தண்ணீர் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கினால்மேலும் அணையில் தண்ணீர் ஏறும் நிலை உள்ளது. பாபநாசம் அணையில் தண்ணீர் இருப்பு அதிகமானால் வீணாக கடலுக்கு திறந்து விடும் நிலை ஏற்படும். இதனால் தண்ணீரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் இப்போதேகுளங்களுக்கு திருப்பி விட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சாஸ்தாவிநல்லூர் விவசாயிகள் நலச்சங்க தலைவர் எட்வின் காமராஜ், செயலர் லூர்துமணி, பொருளாளர் ரூமேஷ், செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், விஜயகுமார், படுக்கப்பத்து விவசாயிகள் சங்கத் தலைவர் சரவணன் உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது மாவட்ட ஆட்சியர் , மாற்றுப்பணிக்கு சென்றதால் கூடுதல் ஆட்சியர் விஷ்ணுசந்திரனிடம் மனு அளித்தனர். மனுவில், வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் மழை காலங்களில் பாபநாசம் அணையில் இருந்து வீணாக கடலுக்கு திருப்பி விடப்படும் தண்ணீரை மருதூர் கால்வாய் வழியாக புத்தன்தருவை,, வைரவம் தருவை குளங்களுக்கு திருப்பி விட வேண்டும்.

இதனால் இப்பகுதி விவசாயிகள் பயனடைவர். புத்தன்தருவை குளத்தில் தண்ணீர் தேக்கும் வகையில்பண்ணை குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here