ஸ்ரீவைகுண்டத்தில் தேவர் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

0
30
devar news

ஸ்ரீவைகுண்டம், அக்.30:

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு ஸ்ரீவைகுண்டத்திலுள்ள தேவர் சிலைக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, நகர செயலாளர் காசிராஜன் தலைமை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு கருப்பசாமி, ஒன்றிய செயலாளர் காசிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டத்திலுள்ள தேவர் சிலைக்கு தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தி இனிப்பு வழங்கினார்.

இதில், மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அய்யாத்துரைபாண்டியன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் பிரபாகர், மாவட்ட கவுன்சிலர் அழகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் ரமேஷ், பொன்ராஜ், வாசுகிநடராஜன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் எட்வர்டு அந்தோணிராஜ், தலைவர் திருப்பதி, பொருளாளர் பார்வதி, அதிமுக நிர்வாகிகள் கால்வாய்முருகையாபாண்டியன், சுப்பையா, சொர்ணபாண்டியன், மாரியப்பன், ஆப்பிள்ராமசாமி, முன்னாள் நகர செயலாளர் சண்முகசுந்தரம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய இளைஞர் இளம்பெண்கள் பாசறை சங்கர்கணேஷ், பஞ்சாயத்து தலைவர் சரவணன், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மோகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுபோன்று ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், நகர திமுக சார்பில் தேவர் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, ஒன்றிய செயலாளர் ஸ்ரீவைகுண்டம் கொம்பையாபாண்டியன், கருங்குளம் இசக்கிபாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் வழக்கறிஞர் ஆறுமுகபெருமாள், நகர செயலாளர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டத்திலுள்ள தேவர் சிலைக்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதாராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், மாநில மாணவரணி உமரிசங்கர், தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜெ.ஜெகன், முன்னாள் பேரூராட்சி தலைவர் அருணாச்சலம், பிரதிநிதி சண்முகசுந்தரம், விவசாய தொழிலாளர் அணி பொறுப்பாளர் சின்னபாண்டி, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் லட்சுமணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பேரின்பராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் தேவர் ஜெயந்தி விழா தாமிரபரணி ஆற்றில் இருந்து புனிதநீர் மற்றும் பால்குடம் எடுத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு தேவர் சிலைக்கு சிறப்பு அபிஷேகத்துடன் கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு தேவர் சிலைக்கு மாநில இளைஞரணி தலைவர் ஸ்ரீவை சுரேஷ்தேவர் தலைமையில் மகாராஷ்டிரா மாநில தேவர் பேரவை பொதுசெயலாளர் அங்கப்பன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொதுசெயலாளர் கால்வாய்முத்துராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில், நிர்வாகிகள் சிவராம் கார்த்திக், துரைசரவணன், ராமசாமி, மணி, சில்வர் பாண்டியன், உடையார் பாண்டியன், ராமகிருஷ்ணன், திருமலைகுமார், அருணாச்சலம், சகாயம், விஜயன், முத்துராமலிங்கம், ராஜ் கோலப்பன், சுப்பையாபாண்டியன், கீழநத்தம் மணி, சீர்மரபினர் உரிமைமீட்பு இயக்கம் சார்பில் ஹரிஹரன், சீனிபாண்டியன், கண்ணன், ராஜன், சுடலைகண்ணு, முத்துராமலிங்கம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம், நகர அமமுக சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். ஸ்ரீவைகுண்டம் பேரூரு£ட்சி செயலாளர் சண்முகசுந்தரம், மாவட்ட ஜெ.,பேரவை சிவராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டத்திலுள்ள தேவர் சிலைக்கு மாநில வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் புவனேஸ்வரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், ஜெ.பேரவை நிர்வாகி அய்யப்பன், வார்டு செயலாளர்கள் முருகன், அருண், கோமு, கருப்பசாமிபாண்டியன், பரமசிவன், சங்கரலிங்கம், மாலை, மகேஷ், கொம்பையா, வள்ளிநாயகம், கணேசன், நவாஸ்கான், வைகுண்டராமன், சுடலைமணி, பொன்ராஜ், மாணவரணி முத்துராஜ், செந்தில், புதுக்குடி சிங்கப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. விழாவினை முன்னிட்டு, ஸ்ரீவைகுண்டத்திலுள்ள தேவர் சிலைக்கு வட்டார துணைத்தலைவர் அலங்காரபாண்டியன், நகர தலைவர் சித்திரை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், ஐஎன்டியுசி சுந்தர்ராஜ், நகர செயலாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஸ்ரீவைகுண்டம் பாஜக சார்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் பால்ராஜ் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், பொது செயலாளர் செல்வராஜ், கோட்ட பொறுப்பாளர் ராஜா, வழக்கறிஞர் முத்துராமலிங்கம், ஒவவஒன்றிய தலைவர் சாமிநாதன், மாவட்ட செயலாளர் சங்கர், அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சித்திரைவேல், நிர்வாகிகள் காளியப்பன், மருதுவாலன், காசிராமன், விக்னேஷ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here