கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் – அமைச்சர் கடம்பூர் செ ராஜூ உறுதி

0
89
minister kadambur raju

கோவில்பட்டியில் விரைவில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து வகையான ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இது குறித்து அமைச்சர், ‘’இது தொடர்பாக நீதிமன்றத்தில் உள்ள வழக்கினை வாபஸ் பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் எழுதி உள்ளார். நானும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளிடம் நேரிடையாக வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளேன். விரைவில் நல்ல முடிவு வந்தபிறகு போர்க்கால அடிப்படையில் ஒட்டுமொத்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். சாலை விரிவாக்கம் விரைவாக நடக்கும். அதன் பின்னர் மழை நீர் தேங்குவது பிரச்சினை நிரந்தரமாக இருக்காது’’ என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here