தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்குபோனஸ் – என்.பி.ஜெகன் பெரியசாமி வழங்கினார்

0
28
np jegan

தீபாவளி பண்டியையை முன்னிட்டு தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. தூத்துக்குடி தன்பாடு உப்பு மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் தலைவர் என்.பி.ஜெகன் பெரியசாமி வழங்கினார். மேலும் தொழிலாளர்களுக்கு இன்ஸூரன்ஸ் வசதியும் துவங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் ஏ.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் என்.பி.ஜெகன் பெரியசாமி தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கினார். துணைத்தலைவர் எஸ்.ரெங்கசாமி, துணைச்செயலாளர் எம்.நாகராஜ், பொருளாளர் டி.ஆறுமுகநயினார், மாவட்ட தொழிற்சங்க பொறுபாளர் சுசி ரவீந்திரன், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, 7வது வார்டு திமுக வட்ட செயலாளர் ரவீந்திரன், போல்பேட்டை திமுக பிரதிநிதி பிரபாகர் மற்றும் கீதாமாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சுமார் 8 லட்சத்து 42 ஆயிரம் வரை தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் உறுப்பினர்களுக்கு இன்ஸூரன்ஸ் திட்டம் தொடங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here