தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாள் விழா

0
24
geethajeevan

தூத்துக்குடி, நவ.26:

தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :

தி.மு.க மாநில இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நகர, ஒன்றிய, பகுதி, பேரூா்க் கழகங்கள் தோறும் திமுக இளைஞரணி சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட இருக்கிறது.

அதன்படி (27ம் தேதி) காலை 7 மணிக்கு தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் மாவட்ட, மாநகர இளைஞரணி சார்பில் கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. காலை 10 மணிக்கு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் சூரங்குடி ஊராட்சியில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குதல்,

இதேபோன்று கயத்தாறு கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் கயத்தாரில் கேக் வெட்டுதல் மற்றும் 100 ஏழைகளுக்கு அரிசி, பருப்பு வழங்குதல். மதியம் 12 மணிக்கு புதூா் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் நாகலாபுரத்தில் உள்ள தேனம்மாள் முதியோர் இல்லத்தில் அறுசுவை உணவு வழங்குதல். கோவில்பட்டி மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் லாயல் மில் காலனியில் 100 ஏழைகளுக்கு மதிய உணவு வழங்குதல்,

ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் குறுக்குச்சாலை மற்றும் பசுவந்தனையில் கேக் வெட்டுதல் மற்றும் 300 ஏழைகளுக்கு பிரியாணி சாப்பாடு மற்றும் வேஷ்டிகள் வழங்குதல், விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் நாகலாபுரம் தேனம்மாள் முதியோர் இல்லத்திற்கு காலை மற்றும் இரவு உணவு வழங்குதல். கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் எட்டயபுரம் மனநலக் காப்பகத்திற்கு மதிய உணவு வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

28ம் தேதி காலை 10 மணிக்கு கோவில்பட்டி நகர இளைஞரணி சார்பில் 27ம் தேதி கோவில்பட்டி அரசு மருத்துவ மனையில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்கமோதிரம் வழங்குதல். டிசம்பர் 6ம் தேதி தூத்துக்குடி வடக்கு மாவட்ட, மாநகர இளைஞரணி சார்பில் கலைஞர் அரங்கத்தில் ரத்ததான முகாம் நடைபெறுகிறது.

டிசம்பர் 2 ம்தேதி முதல் 7 ம்தேதி வரை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் மருத்துவ முகாம், இரத்ததான முகாம், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குதல், டிசம்பர் 27ம் தேதி புதூா் கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் புதூா் நகரத்தில் கழக கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here