மீரான்குளம் ஊராட்சி பழைய குடிநீர் குழாயில் புதிய இணைப்பு – கிராம மக்கள் எதிர்ப்பு

0
79
sathankulam

சாத்தான்குளம், டிச. 16:

மீரான்குளம் ஊராட்சியில் ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்கும் பணியில் பழைய குடிநீர் குழாயில் புதியஇணைப்பு வழங்குவதற்கு கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சாத்தான்குளம் வட்டம் ஆழ்வார்திருநகரி ஒன்றியம் மீரான்குளம் ஊராட்சியில் மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டம் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தில் ரூ49.3லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சியில் 877 பேர்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளது. இப்பணியானது தற்போது தொடங்கப்பட்டு மீரான்குளம் ஊராடசிக்குள்பட்ட பெருமாள்குளம், தேர்க்கன்குளம், வசவப்பனேரி, மீரான்குளம் ஆகிய கிராமங்களில் பணிகள் நடந்து வருகிறது. அதில் வீ¦டுகளில் பல இணைப்புகள் இருப்பின் அதன் குழாய்களை மாற்றாமல் அதில் புதிய இணைப்புகள் கொடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும் சிறிய அளவிலான குழாய் மூலம் தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் புகார் எழுந்துள்ளது. பழைய குழாய் வழியாக புதிய குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு கிராமக்கள் கடும் எதிர்த்து தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர், ஒன்றிய ஆணையருக்கு புகார் தெரிவித்துள்ளனர். ஆதலால் ஜல் ஜீவன் திட்டத்தில் புதிய குழாய் பதித்து வீடுகளுக்கு தேவையான அளவு தண்ணீர் கிடைக்கும் வகையில் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில் தேர்க்கன்குளம் பகுதியில் பழைய குடிநீர் இணைப்பில் புதிய இணைப்பு கொடுக்க சென்ற பணிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து ஊராட்சித் தலைவர் சிவபெருமாள் மற்றும் கிராமமக்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பாரத பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அனுப்பி மனுவில், ஜல்ஜீவன் திட்டத்தில் அனைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் வரவேற்கதக்கது. அதில் தற்போது மீரான்குளம் ஊராட்சி 877 இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு இணைப்புக்கு ரூ5680 நிர்ணயிக்கப்பட்டு வீட்டுக்கு 10இல் ஒரு பங்காக 568 ரூபாயும், வைப்பு தொகை ரூ 1000ம் வாங்கப்பட்டுள்ளது.

தற்போது குடிநீர் இணைப்பு வழங்கும்பணி நடந்து வருகிறது. அதில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட குழாய் வழியாக வீடுகளுக்கு புதிய இணைப்பு வழங்கப்படுகிறது. இதனால் குடிநீர் முறையாக கிடைக்காத நிலை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. ஆதலால் அதிகாரிகள் ஆய்வு நடத்தி மீரான்குளம் ஊராட்சியில் தேர்வு பெற்ற அனைத்து வீடுகளுக்கு புதிய குழாய் பதித்து முறையாக இணைப்பு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here