தூத்துக்குடியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸார் ஏர்கலப்பை பேரணி – 136 பேர் கைது

0
102
thoothukudi congress

தூத்துக்குடி, டிச.17:

தூத்துக்குடியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து ஏர்கலப்பை பேரணியில் ஈடுபட்ட 136 காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண்சட்டத்தைதிரும்ப பெற வலியுறுத்தி தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் ஏர் கலப்பை பேரணி நடந்தது. தூத்துக்குடி விவிடி சிக்னல் அருகில் நடந்த போராட்டத்துக்கு மாநகர் மாவட்டத்தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் பேரணியை துவக்கி வைத்தார்.

மாநகர துணைத் தலைவர் பிரபாகரன், மண்டலத்தலைவர்கள் சேகர், செந்தூர்பாண்டி, ஐசன்சில்வா, ஐஎன்டியூசி ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத் தலைவர் ஏபிசிவீ சண்முகம்,முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, முன்னாள் மாவட்டத்தலைவர்கள் ஜெயக்குமார், அருள், சிவசுப்பிரமணியன், சுப்பிரமணிய ஆதித்தன், மாநில மீனவரணி பொதுச்செயலாளர் ரொனால்டுவில்லவராயர், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஸ்டாலின், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பெருமாள்சாமி, சகாயராஜ், மாநில மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் கனியம்மாள்,

பொதுக்குழு உறுப்பினர்கள் மகேந்திரன், சந்திரசேகரன், பிரேம்குமார், கணேஷ், முன்னாள் மாநகர கவுன்சிலர்கள் சந்திரபோஸ், கந்தசாமி, சாமுவேல்ஞானதுரை, மகிளா காங்கிரஸ் செயலாளர் உமா ஒயிட்டின், மாவட்ட தலைவி முத்துவிஜயா, முன்னாள் நகர தலைவர் அன்புராஜ், சாத்தான் குளம் வட்டாரத்தலைவர் ஜனார்த்தனம், நாசரேத் நகர தலைவர் ரவி, ஆழ்வை பார்த்தசாரதி மற்றும் சித்திரைபால்ராஜ், மார்க்கஸ், ராதாகிருஷ்ணன், கோபால், ராஜா, முத்துமணி, அருணாச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பேரணிக்கு போலீசார் அனுமதிக்காததால் சிறிது நேரம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44 பெண்கள் உள்பட 136 பேர் கைது செய்யப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here