தூத்துக்குடியில் தொழில் மேலாண்மை பயிற்சிகள் வரும் 8ம் தேதி தொடங்குகிறது

0
138
nadunilai news

தூத்துக்குடி,ஜன.05:

இது குறித்து தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர் து.ராஜ்செல்வின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்கநிறுவனம் (சென்னை), தூத்துக்குடிமாவட்ட குறு-சிறுதொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்துநடத்தும் தொழில் பயிற்சிகளை கட்டணமுறையில் தூத்துக்குடியில் உள்ள துடிசியா அரங்கத்தில் நடத்துகிறோம்.

அதன்படி08.01.2021 வெள்ளிக்கிழமை அன்று‘நிதிமேலான்மை மற்றும் அடிப்படை கணக்கியல் கருவிகள் (Tally)’பற்றியபயிற்சிகட்டணம்:ரூ600/-எனவும்,11.01.2021, 12.01.2021, 18.01.2021, 19.01.2021 மற்றும் 20.01.2021 (5 நாட்கள்) ஆகிய தேதிகளில்‘தொழில் மாதிரி மற்றும் திட்டஅறிக்கை தயாரித்தல்’பயிற்சிகட்டணம்: ரூ700/-எனவும், தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து பயிற்சிகளும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணிவரை நடைபெறுகிறது. ஏற்கனவே தொழில் செய்வோரும்இ புதியதொழில் செய்ய விரும்புவோரும் இப்பயிற்சிகளில் கலந்துகொண்டு பயன் பெறலாம். மதியஉணவுவழங்கப்படும்.

முதலில் பதிவுசெய்யும் 30 நபர்களே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விபரங்கள் அறியதொடர்பு கொள்ளவும் : துடிசியா:கதவுஎண் 4/158,எட்டையாபுரம் ரோடு, கே.டி.சி -டிப்போ அருகில் தூத்துக்குடி-2 என்றமுகவரியில் அல்லது9791423277என்றஎண்ணில் தொடர்பு கொள்ளவும்’’. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பயிற்சியில் கலந்துகொள்வதற்கு பதிவுசெய்ய கடைசிதேதி :07.01.2021.பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புவர்கள் துடிசியா அலுவலகத்தில் வந்து பதிவுசெய்யலாம் என தூத்துக்குடி மாவட்ட குறு-சிறுதொழில் சங்கத்தின்(துடிசியா) பொதுச்செயலாளர், து.ராஜ்செல்வின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here