தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
நாசரேத்,ஜன.13:
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நாசரேத் கிளை சீனியர் மேனஜர் ஜஸ்டின் ஜாண் தலைமை வகித் தார். நாசரேத் கிளை துணை மேலாளர் ரெஜீன் முன்னிலை வகித்தார். புஷ்பம் அன்கோ அதிபர் செந்தில்குமார் மற்றும் வங்கி ஊழியர்கள் பொங்கலிட் டனர்.
மூக்குப்பேறி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது.

நாசரேத், ஜன.13:
மூக்குப்பேறி ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம் நடந்தது.
விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் கமலா கலை அரசு தலைமை வகித்து கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். துணை தலைவர் தனசிங், வார்டு உறுப்பினர்கள் ரீட்டா, பிச்சை கனி, அந்தோனி கிறிஸ்டி, பாக்கிய சீலி, கலை அரசு மற்றும் பானுமதி, எல்சி, சுந்தரி, சவான், ராஜன், கணேசன், மாடசாமி, துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர்.