நாசரேத்,ஜன.16:
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தாளாளர் சந்திரன் தலைமை வகித்தார். பாடகர் குழுவினர் இறைவணக்கப்பாடல் பாடினர். தலைமை ஆசிரியர் ஆல்பர்ட் வரவேற்றார். நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். மொத்தம் 177 மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டன.
இதில் உடையார்குளம் சுகாதார அலுவலர் தியாகராஜன், பேரூராட்சி அலுவலர் ராம்முருகன் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர். நாசரேத் புனித யோவான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி யில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தாளாளர் சாந்தகுமாரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை மாசில்லா வரவேற்றார். நாசரேத் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூரியன் மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை வழங்கினார். மொத்தம் 195 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டன.
இதில் பள்ளி இளநிலை உதவியாளர் கிங்ஸ்லிஇ நாசரேத் தனிப்பிரிவு காவலர் ராபின்; மற்றும் ஆசிரியைகள்இ அலுவலர்கள் கலந்து கொண்டனர். உதவி தலைமை ஆசிரியை மெர்லின் ரத்தினாவதி நன்றி கூறினார்.