தூத்துக்குடி, பிப்.17:-
தூத்துக்குடி அரசு இன்ஜினீயரிங் கல்லூரியின் தொழில்நுட்ப பயிற்சியில் தேர்ச்சி பெற்ற மாணவர்களை கலெக்டர் பாராட்டினார்.
தூத்துக்குடி வ.உ.சி அரசு இன்ஜினீயரிங் கல்லூரியின் இயந்திரவியல் பிரிவு மாணவர்களுக்கு புதிய தகவல் தொழில்நுட்பங்களை உருவாக்குவது தொடர்பான பயிற்சினை தூத்துக்குடி விஞ்ஞானி முருகன் அளித்தார்.
20மாணவர்கள் இப்பயிற்சியில் பங்கேற்ற நிலையில், விளாத்திக்குளம் புதூர் மாதுளப்புரத்தை சேர்ந்த முருகபாண்டி, கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த ஹரிஹரன் ஆகியோர் தொழில்நுட்பம் மூலமாக புதிய பொருட்களை உருவாக்குவதற்கான பயிற்சியில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர். சாதனை படைத்த மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் விஞ்ஞானி முருகன் ஆகியோரை கலெக்டர் செந்தில்ராஜ் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.