தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயுர்வேதா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு கசாயம் வழங்கல்

0
21

தூத்துக்குடி,ஏப்;9:

தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயுர்வேதா பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்திக்கான கசாயம் வழங்கப்பட்டது.

நாடுமுழுவதும் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மேலும் டெங்கு காய்ச்சலும் வேகமாக பரவி வருகிறது. இவைகளை கட்டுப்படுத்த தமிழக அரசு சுகாதாரத் துறையை முடுக்கி விட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் ராஜசெல்வி அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயுர்வேதா பிரிவு சார்பில் இன்று மருத்துவ மனை பின்புறம் உள்ள மக்களுக்கு கொரோனா, டெங்கு நோய்களுக்கான எதிர்ப்பு சக்திக்கான கசாயம் மற்றும் பொடிகள் வழங்கப்பட்டது. இதனை தூத்துக்குடி அரசு மருத்துவமனை ஆயுர்வேதா மருத்துவ அலுவலர் டாக்டர் ஜாண்மோசஸ் தலைமையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் பொதுமக்களுக்கு வழங்கினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here