நாசரேத்,ஏப்21:
ஜெயராஜ் அன்ன பாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கி யம் பொறியியல் கல்லூரியில் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.கல்லூரி தாளாளர் சசிகரன் வரவேற்புரையாற்றினார்.
விழா விற்கு தூய யோவான் பேராலய தலைமைக்குருவானவர் ஆண்ட் ரூ விக்டர் ஞானஒளி தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக மனோன் மணியம் சுந்தரனார் பல்கலை கழக டீன் பேராசிரியர் வில்லியம் தர்மராஜா கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பட்டங் களை வழங்கி வாழ்த்துரை வழங் கினார்.
விழாவில் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜெயக்குமார் நன்றி கூறினார். நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் விழாவில் பங்கு பெற்ற அனைவருக்கும் கல்லூரி யின் நாட்டு நலப்பணி சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சாத்தான்குளம் கல்வியியல் கல்லூரி தாளாளர் மாமல்லன், திருமண்டல செயற் குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார், மர்காஷிஸ் மெட்ரி குலேஷன் பள்ளி தாளாளர் புஷ்ப ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழா விற்கான ஏற்பாடுகளை அலுவ லர்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர்.