மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் – சாத்தான்குளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

0
105
bjp

சாத்தான்குளம், மே 5:

மேற்கு வங்கத்தில் பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கைகோரி சாத்தான்குளத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் சட்டபேரவை தேர்தல் முடிந்தவுடன் பாஜக தொண்டர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பாஜக தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை முன்பு ஒன்றிய பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய பாஜக தலைவர் ஆர். செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் எஸ்.பி. கணேசன்,மாவட்ட பொதுச் செயலர் எஸ். செல்வராஜ், மாவட்ட பிரச்சாரபிரிவு தலைவர் ஏ. மகேஸ்வரன், துணைத் தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட வழக்குரைடர் பிரிவு செயலர் முத்துலிங்கம், மாவட்ட வர்த்தக பிரிவு செயலர் அ. பரமசிவன், மாவட்ட மருத்துவர் பிரிவு செயலர் பூபதிபாண்டியன், ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர்.

இதில் மாவட்ட ஓபிசி பிரிவு செயலர் எட்வர்ட் ராஜதுரை. ஒன்றிய துணைத் தலைவர் கோ. ஜெயசுந்தர்ராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலர் முத்துலிங்கம், ஒன்றிய விவசாய அணி தலைவர் சரவணபாண்டியன், ஒன்றிய வணிகர் பிரிவு தலைவர் தினகரன், ஒன்றிய ஓபிசி அணி தலைவர் பேராத்துச் செல்வம், திருநெல்வேலி மண்டல இந்து முன்னணி செயலர் பெ. சக்திவேலன்,மாவட்ட நெசவாளர் பிரவு துணைத் தலைவர் சுடலைக்கண், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுடலைக்கண், ஒன்றிய வர்த்தகபிரிவு துணைத் தலைவர் பழனிவேல், அரசு அலுவலர் தொடர்பு பிரிவு ஒன்றிய தலைவர் சரவணசெல்வக்குமார், மாவட்ட அமைப்பு சாரா பிரவு செயலர் ராஜன், ஒன்றிய நெசவாளர் அணி துணைத் தலைவர் சுடலையாண்டி, ஒன்றிய இளைஞரணி தலைவர் இன்பஅருள், கிராம பாஜக தலைவர் சுடலைமுத்து, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here