இந்து மத பாடசாலையில் படித்தவர்களை மட்டுமே கோவில்களில் அதிகாரியாகவும், பணியாளராகவும் நியமிக்க வேண்டும்

0
23
nadunilai

உலகில் எந்த ஒரு நிர்வாகத்தில் பணியாற்ற வேண்டும் என்றாலும் அந்த துறை சார்ந்த படிப்புகளை படித்திருந்தால் மட்டுமே அது சாத்தியம். ஆனால் தற்போது இந்து மத கோவில்களில் மட்டும் அது நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை. பொதுவான கல்வி கற்றவர் அதிகாரியாகவும், அந்த நிர்வாகத்தால் அங்கிகரிப்படுபவர்கள் பணியாளராகவும் வருகிறார்கள். இந்து மதத்தை சேர்ந்தவர் என்கிற சான்றிதழ் இருந்தால் மட்டும் போதும். இது பெரிய ஏமாற்று வேலை என்றே கருத முடிகிறது.

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்கள் அரசின் அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழ் இருக்கிறது. அந்த அறநிலையத்துறை இந்து மத பாதுகாப்பிற்கும், கோவில்களின் வளர்ச்சிக்கும், பக்தர்களின் நலனுக்காகவும் எந்தமாதிரி பணியாற்றி வருகிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.

ஆதிகாலங்களில் ஆசிரமங்கள் மூலம் ஆன்மிக பாடங்கள் சொல்லிக் கொடுக்கப்பட்டது. வேதபாடங்களை படித்தவர்களே ஆன்மிக விவகாரங்களில் முதன்மை பொறுப்பில் இருந்தார்கள். அவர்களே கோவில்களை நிர்வாகம் செய்தனர். அப்போது வகுக்கப்பட்ட ஆன்மிக நடைமுறைகள் அனைத்தும் ஆகம விதிகளாக கருதப்படுகிறது.

தற்போதைய அறநிலையத்துறை ஆகம விதிக்குள் தலையிடமாட்டார்கள் என்றாலும், அதிகாரியாக வருவோர் ஆன்மிகம் சாராதவராக இருந்தால் அவர்களுக்குள் இணக்கம் வராது. இந்து மதத்தில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் பலர் இந்து மதத்தை விமர்சிப்பதை பார்க்கமுடிகிறது. அடுத்த கலாசாரத்தை ஆதரிப்போர் கூட இந்து மத போர்வையில் இந்து மத கோயில்களை நிர்வாகம் பார்க்க வரமுடியும். அதற்கு பட்டப்படிப்பும், இந்து மதத்தவர் என்கிற ஒரு சான்றிதழ் மட்டும் போதும்.

இந்தமாதிரி நிலை ஏற்படாமல் இருக்க, உண்மையாகவே அரசுக்கு இந்து மதத்தின் மீதும், இந்து மத கோவில்கள் மீதும் பாசமும், பரிவும் இருந்தால், ஆன்மிக பாடங்களை படித்தவர்களை மட்டும் நிர்வாகம் பார்ப்பதற்கும், பணியாற்றுவதற்கும் நியமிக்க வேண்டும்.

இந்து மத கோவில்களை அரசின் அறநிலையத்துறையின் கீழ் வைத்துதான் நிர்வாக பார்ப்போம் என்று பிடிவாதம் பிடிக்க நினைத்தால் இந்து மதம் சார்ந்த பாடசாலைகளை உருவாக்க வேண்டும். அந்த பாடசாலையில் குறைந்தது இரண்டு வருடங்கள் தங்கி இருந்து பாடம் படித்தவரே இந்து கோவில்களை நிர்வாகம் பார்ப்பதற்கும், பணியாற்றுவதற்கும் தகுதி படைத்தவராவர். அவர்களுக்கு இந்து மதத்தில் உள்ள அனைத்து நடைமுறைகள், வரலாறுகள் அனைத்தும் பாடமாக சொல்லப்படவேண்டும்.

மருத்துவ துறையில் வேலைபார்க்க வேண்டும் என்றால் அந்த துறை சார்ந்த படிப்பு கட்டாயம் என்பதுபோல், ஆன்மிக துறையில் நிர்வாகம் பார்க்கவும், பணியாற்றவும் ஆன்மிக அறிவு கட்டாயம் வேண்டும். மாறாக அரசியல் கட்சியினருக்கான வேலைவாய்ப்பு துறையில்லை இந்த ஆன்மிகத்துறை. ஆன்மிக அறிவு உள்ளவர்கள் அதில் நாட்டம் உள்ளவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் நிர்வாகம் பார்க்கும்போது, கோவில்கள் கவணிக்கப்படாமல் உடைந்து கிடக்கிறது என்று சொல்ல வேண்டியது வராது.

அரசும், ஆன்மிகவாதிகளும் இணைந்து இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் இந்த கோரிக்கையை வலியுறுத்தியும், அதை நிலை நாட்டவும் தமிழகத்தில் ஆன்மிக ஒருங்கிணைப்பு குழு உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது.

நடுநிலை.காம் ஆர்.எஸ்.சரவணப்பெருமாள் : 8056585872

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here