
தூத்துக்குடி,மே.26:
கொரோனாவால் பாதிக்கப்படுவோரை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் அழைகப்பட்டு வருகிறது. தற்போது அதிக அளவில் பாதிப்பு இருப்பதால் ஒரே நேரத்தில் பல இடங்களிலிருந்து வரும் அழைப்புகளை கேட்டு நோயாளிகளை அழைத்து செல்ல 108 ஆம்புலன்ஸ் சேவை திணறுவதாகவே சொல்லப்படுகிறது. இதனால் தமிழக அரசு ஆலோசனை செய்து நடமாடும் ஆக்சிஜன் பேருந்து சேவையை தொடங்கியிருக்கிறது.
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் தனியார், பேருந்துகளை ஏற்பாடு செய்து, அந்த பேருந்தின் அனைத்து சீட்களிலும் ஆக்சிஜன் வசதி செய்யபட்டிருக்கிறது. இதனால் ஒரு சிலருக்கு மேல் பாதிக்கப்படும் பகுதிக்கு சென்று அவர்களை ஏற்றி வரமுடியும். விரைவில் இந்த திட்டம் தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வருகிறது.